search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயி பலி"

    • உறவினர்கள் வெங்கடேசனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
    • மொரப்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    மொரப்பூர்:

    தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே ஆர்.கோபிநாதம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 62). விவசாயி. இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    இவர் இன்று காலை தனது தோட்டத்தில் களை எடுக்கும் எந்திரத்தை வைத்து வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த எந்திரத்தில் கால்கள் மாட்டி கொண்டதால் உடல் முழுவதும் அந்த எந்திரத்தில் சிக்கியது. இதில் வெங்டேசன் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த உறவினர்கள் வெங்கடேசனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    இதுகுறித்து உறவினர்கள் மொரப்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து வெங்கடேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மணிகண்டன் காலை 7 மணியளவில் தனக்கு சொந்தமான நிலத்திற்கு சென்றார்.
    • மணிகண்டன் மீது பாய்ந்து தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    விழுப்புரம்:

    மரக்காணம் அருகே நடுக்குப்பம் திரவுபதி அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 45). விவசாயி. இவர் இன்று காலை 7 மணியளவில் தனக்கு சொந்தமான நிலத்திற்கு சென்றார். அங்கு உயர்மின் அழுத்த கம்பி தாழ்வாக சென்றது. இக்கம்பி நிலத்தில் இருந்த தென்னை மரத்தில் உரசி சென்றது. இந்த மரத்தின் தென்னை ஓலை நிலத்திற்கு செல்லும் வழியில் படர்ந்து இருந்தது.

    அந்த வழியில் நடந்து சென்ற விவசாயி மணிகண்டன், வழியில் படர்ந்திருந்த தென்னை ஓலையை நகர்த்திவிட்டு செல்ல முயற்சித்தார். தென்னை மரத்தில் பாய்ந்த உயர் மின் அழுத்த மின்சாரம், மணிகண்டன் மீது பாய்ந்து தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதனை பார்த்த பக்கத்து நில உரிமையாளர்கள், இது தொடர்பாக மணிகண்டன் குடும்பத்தாருக்கும், மரக்காணம் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.

    அங்கு வந்த விவசாயி மணிகண்டன் குடும்பத்தார் கதறி அழுத காட்சி காண்போரின் மனதை கலங்கடித்தது. சம்பவ இடத்திற்கு வந்த மரக்காணம் போலீசார் மணிகண்டன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுவை மாநிலம் கனகசெட்டிக்குளம் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் நடந்த பகுதியில் உயர் மின் அழுத்த கம்பிகள் தாழ்வாக செல்கிறது என மின்துறை அலுவலகத்தில் பலமுறை புகார் கொடுத்துள்ளோம். இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரி செய்தி ருந்தால் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.

    • லாரியை முந்தி செல்ல முயன்ற போது விபரீதம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    செங்கம்:

    செங்கம் அருகே உள்ள முன்னூர் மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார்(வயது 44) விவசாயி. இவர் நேற்று இரவு செங்கத்திலிருந்து முன்னூர் மங்கலம் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார். குயிலம் கூட்ரோடு அருகே சென்றபோது முன்னாள் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றார்.

    அப்போது எதிரே வந்த மினி வேன் குமார் ஓட்டி வந்த பைக் மீது எதிர்பாராத விதமாக உரசியது. இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து புதுப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துனர்.

    மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராமகிருஷ்ணன் மோட்டார் சைக்கிளில் எடுத்துக் கொண்டு விற்பனை செய்வதற்காக பண்ருட்டிக்கு வந்துகொண்டிருந்தார்.
    • சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த மாளிகம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (65), பலா விவசாயி, இவர் தனது நிலத்தில் அறுவடை செய்யப்பட்ட பலாப்பழங்களை இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் எடுத்துக் கொண்டு விற்பனை செய்வ தற்காக பண்ருட்டிக்கு வந்துகொண்டிருந்தார். பண்ருட்டி சென்னை சாலை பணிக்கன் குப்பம்அ ருகே வந்து கொண்டி ருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த விவசாயி ராமகிருஷ்ணன் 108 ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டி அரசு ஆஸ்ப த்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி தகவல் அறிந்த காடாம்புலியூர் போலீஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகின்றனர்.

    • சந்திரபோஸ் விவசாய கூலி இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது.
    • சந்திரபோஸ் வாயில் நுரை பொங்க மயங்கி கிடந்தார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் அருகே தரங்கம்பாடி நல்லாடை, கார்குடி பகுதியை சேர்ந்தவர் (மயிலாடுதுறை மாவட்டம்) சந்திரபோஸ் (வயது64). இவர் விவசாய கூலி வேலைசெய்து வந்தார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு மனைவி ராதாவிடம் சந்திரபோஸ் மது குடிக்க பணம் கேட்டு சண்டையிட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபப்பட்டு வெளியே சென்றவர் 10 மணி வரை வீடு திரும்பவில்லை.

    இந்நிலையில், பக்கத்து வீட்டில் வசிக்கும் உறவினர் ஒருவர், நெடுங்காடு நல்லாத்தூர் மேலபடுகை சாலை பாலத்தில், சந்திரபோஸ், மது மற்றும் பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடப்பதாக உறவினர் மூலம் ராதாவிற்கு தகவல் சென்றது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, சந்திரபோஸ் வாயில் நுரை பொங்க மயங்கி கிடந்தார். தொடர்ந்து, நெடுங்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்று முதல் உதவி அளித்து, மேல்சிகிச்சைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்தி ரிக்கு தூக்கி சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். பின்னர், ராதா, நெடுங்காடு போலீசில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • விவசாயி சேட்டு (எ) வெங்கடேஷ் (வயது 45). இவருக்கு அம்பிகா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.
    • மக்காச்சோளத்தை இறக்கு வதற்காக டிராக்டரில் இணைக்கப்பட்டிருந்த ட்ரெய்லரை உயரத்திய போது, எதிர்பாராத வித மாக மேலே சென்ற மின்கம்பி மீது ட்ரெய்லர் மோதியது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப் பாடி அடுத்த சிங்கிபுரம் மேலக்காடு கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சேட்டு (எ) வெங்கடேஷ் (வயது 45). இவருக்கு அம்பிகா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.

    இவர் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை தனது தோட்டத்தில் விளைந்த மக்காச்சோளத்தை ஏற்றிக் கொண்டு, வாழப்பாடி மங்கம்மா சாலையிலுள்ள வேளாண் வணிகத்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு டிராக்டரில் சென்றுள்ளார். மக்காச்சோளத்தை இறக்கு வதற்காக டிராக்டரில் இணைக்கப்பட்டிருந்த ட்ரெய்லரை உயரத்திய போது, எதிர்பாராத வித மாக மேலே சென்ற மின்கம்பி மீது ட்ரெய்லர் மோதியது. இந்த விபத்தில் மின்சாரம் பாய்ந்து விவ சாயி வெங்கடேஷ் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக பலியானார்.

    இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு விளை பொருளை கொண்டு சென்ற போது மின்சாரம் பாய்ந்து பலி யான விவசாயி குடும்பத்திற்கு அரசு நிவா ரணம் வழங்க வேண்டுமென இவரது உறவினர்களி டையே கோரிக்கை எழுந்துள்ளது.

    • எதிர்பாராத விதமாக சுரேஷ்குமார் மீது மோதியது.
    • மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி ஒன்றியம் சின்னியம்பாளையம் பஞ்சாயத்து பாலக்காட்டு தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் குமார் (50) விவசாயி. இவருக்கு சசிகலா என்ற மனைவியும், கனிஷ்கா என்ற மகளும் உள்ளனர்.

    இந்நிலையில் நேற்று மாலை சுரேஷ்குமார் தனது மொபட்டில் லக்காபுரத்தில் இருந்து சின்னியம்பாளையம் நோக்கி வந்து கொண்டிரு ந்தார். அப்பொழுது எதிரே வந்த கார் எதிர்பாராத விதமாக சுரேஷ்குமார் மீது மோதியது.

    இந்த விபத்தில் மொபட்டில் வந்த சுரேஷ்குமார் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சம்பவம் குறித்து மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    விரைந்து வந்த போலீசார் சுரேஷ்குமாரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு பரிசோ தனை செய்த டாக்டர் சுரேஷ்குமார் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    விபத்து குறித்து சுரேஷ் குமாரின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் கார் ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய கிருஷ்ணகிரி மாவட்டம் பண்டபள்ளி கொத்தூர் பகுதியை சேர்ந்த நாகராஜன் என்பவரது மகன் நந்தகுமார் (23) மீது மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விவசாயி காசிலிங்கம் நேற்று மாலை தனக்கு சொந்தமான விவசாய நிலத்திற்கு சென்றார்.
    • நிலத்தில் உள்ள வரப்பில் நடந்து சென்றபோது விவசாயி காசிலிங்கம் காலில் ஏதோ கடித்தது.

    சேத்தியாத்தோப்பு:

    சேத்தியாத்தோப்பு அருகே வீரமுடையான்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் காசிலிங்கம் (வயது 60). விவசாயி. இவர் நேற்று மாலை தனக்கு சொந்தமான விவசாய நிலத்திற்கு சென்றார். அப்போது நிலத்தில் உள்ள வரப்பில் நடந்து சென்றபோது காலில் ஏதோ கடித்தது.

    இதில் நிலத்திலேயே மயங்கி விழுந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், பாம்பு கடித்து அவர் இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்த புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தன் சொந்த ஊருக்கு செல்வ தற்காக ஒரு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.
    • பின்னால் வந்த வேன் ஆட்டோ மீது மோதியது.

    விழுப்புரம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் லப்பை பேட்டையைச் சேர்ந்தவர் கணபதி (55) விவசாயி. இவர் விழுப்புரம் மாவ ட்டம் மேல்மலையனூர் அருகே பெரிய நொளம்பை கிராமத்தில் உள்ள தன் மருமகன் வீட்டிற்கு வந்து விட்டு மீண்டும் தன் சொந்த ஊருக்கு செல்வ தற்காக ஒரு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.

    சஞ்சீவிராயன்பேட்டை அருகில் சென்ற போது ஆட்டோ டிரைவர் திடீரென பிரேக் போட்டு ள்ளார். இதனால் பின்னால் வந்த வேன் ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த கணபதி, சேத்துப் பட்டைச் சேர்ந்த மார்ட்டீன், நத்தமேட்டைச் சேர்ந்த சண்முகம் ஆகி யோர் படுகாயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் இவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேத்துப்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே கணபதி பரிதாபமாக இறந்தார். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து புகாரி ன்பேரில் அவலூ ர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இயற்கை உபாதை கழிப்பதற்காக வேடி இன்று காலை அங்குள்ள ஏரிக்கு சென்று கொண்டிருந்தார்.
    • யானை விடாமல் துரத்தி வேடியை காலால் வயிற்றில் மிதித்தது.

    காரிமங்கலம்:

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகேயுள்ள முக்குலம் பெரிய மொரசுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் வேடி (வயது55). விவசாயி. இவரது மனைவி குந்தியம்மாள். இவர்களுக்கு வெங்கடாசலம், வேட்ராய் என்கிற 2 மகன்களும், விஜி என்கிற ஒரு மகளும் உள்ளனர்.

    இயற்கை உபாதை கழிப்பதற்காக வேடி இன்று காலை அங்குள்ள ஏரிக்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது ஒரு மாந்தோப்பின் அருகில் சென்றபோது யானை ஒன்று பின்தொடர்ந்து வந்தது. இதனை கவனித்த அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே அங்கிருந்து தப்பியோடி சென்று கொண்டிருந்தார். ஆனால் அந்த யானை விடாமல் துரத்தி வேடியை காலால் வயிற்றில் மிதித்தது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதனை அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி காரிமங்கலம் போலீசாருக்கும், பாலக்கோடு வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தார்.

    அதன் பேரில் போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். யானை மிதித்து உயிரிழந்த வேடியின் உடலை பார்வையிட்டனர்.

    உடனே அவரது உடலை கைப்பற்றி 108 ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக காரிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கல் குமாரம்பட்டி கோவில் அருகே செல்லும்போது எதிரே வந்த பைக் எதிர்பாராதவிதமாக மோதியது.
    • அங்கு சிகிச்சை பலனின்றி மாரியப்பன் உயிரிழந்தார்.

    ஊத்தங்கரை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த கே.எட்டிபட்டி அருகில் உள்ள கல்குமாரம் பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது32). விவசாயி.

    நேற்று இரு சக்கர வாகனத்தில் கல் குமாரம்பட்டி கோவில் அருகே செல்லும்போது எதிரே வந்த பைக் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் மாரியப்பனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாரியப்பன் உயிரிழந்தார்.

    இது குறித்து சாமல்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • குட்டப்பட்டி அருகே கடந்த 1-ந் தேதி இரவு நடந்து சென்று கொண்டிருந்தார்
    • மோட்டார்சைக்கிளில் நபர் மாது மீது மோதியதில் மாது சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    காவேரிப்பட்டணம்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே பன்னிஅள்ளி பக்கமுள்ள பன்னிஅள்ளிபுதூரை சேர்ந்தவர் மாது (வயது 50). விவசாயி. இவர் பாலக்கோடு காவேரிப்பட்டணம் சாலையில் குட்டப்பட்டி அருகே கடந்த 1-ந் தேதி இரவு நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த நேரம் அவ்வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த நபர் மாது மீது மோதினார்.

    இதில் பலத்த காயம் அடைந்த மாது சம்பவ இடத்திலேயே இறந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் காவேரிப்பட்டணம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×